Tamil Sanjikai

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 18 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 44 வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளும், பாகிஸ்தான் ராணுவத்தினரும் அத்துமீறி இந்திய எல்லையோர கிராமங்கள் மீது அத்துமீறி அடிக்கடி தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய தரப்பிலும் அவ்வப்போது பதிலடி கொடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், அவந்திப்போராவில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், 50-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சென்றிக்கொண்டிருந்தனர். அப்போது சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது திடீரென தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதுடன், துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் 18 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 44 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

0 Comments

Write A Comment