Tamil Sanjikai

ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டிற்கும் இந்தியாவிற்கும் உள்ள நட்புறவுக்கு அடையாளமாக, கானா தலைநகர் அக்ராவில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டது. கானா அரசு பல்கலைக்கழக வளாகத்தில் இந்த சிலையை, ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன் கானா பயணம் செய்த போது, அக்ரா நகரில் உள்ள கானா பல்கலைக் கழகத்தில் மகாத்மா காந்திய சிலையை திறந்து வைத்தார். உலக அமைதி சின்னமாக இது திறந்து வைக்கப்பட்டது. கருப்பின ஆப்பிரிக்கர்களை விட, இந்தியர்கள் சிறந்தவர்கள்’ என காந்தி எழுதிய கருத்துகளை மேற்கோள்காட்டி சிலையை அகற்ற பேராசிரியர்கள் வலியுறுத்தினார்கள். மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி கறுப்பு ஆப்ரிக்கர்களுக்கு எதிரான இனவாதி என விரிவுரையாளர்கள் பலரும் புகார் கூறினார்கள். அவர்கள் காந்தி சிலையை அகற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். உள்நாட்டு தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் சிலையை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைக்க கானா அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவில் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த காந்தி சிலை திடீரென அகற்றப்பட்டது. உலகின் அகிம்சைவாதியாக பார்க்கப்படும் மகாத்மா காந்தியின் சிலை அகற்றப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக கானா வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "சிலை அகற்றப்பட்ட சம்பவம் பல்கலைக் கழகத்தின் உள்விவகாரம்" என்றனர் இந்நிலையில் கானா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டது. இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகிகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது பல்கலைக்கழகம் எடுத்த முடிவு என கானா உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞரான மகாத்மா காந்தி, கடந்த 1893-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா சென்றார். அங்கேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த அவர், பல்வேறு ஆப்ரிக்க நாடுகளிலும் நிறவெறிக்கு எதிராக போராடியது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment