தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்கப்படுவதை தடுக்க சிசிடிவி காமிரா பொருத்துவது குறித்து, இரண்டு வாரரங்களுக்குள் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010 ம் ஆண்டு, சென்னை அபிராமபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில், கூட்டுறவுத்துறையின் கூடுதல் பதிவாளர் தலைமையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, சட்டவிரோதமாக ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்த அதிகாரிகள், கீதா என்ற ஊழியரை பணியிடை நீக்கம் செய்தனர்.
இதனை எதிர்த்து, தன்னை பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் கீதா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நியாயவிலைக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து பதிலளிக்குமாறு, கூட்டுறவுத்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, இன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கூட்டுறவு சங்க பதிவாளரிடம் ஆலோசனை நடத்திய பின்னர், அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2 வாரத்திற்குள் பரிந்துரை செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அதனை செயல்படுத்துவது குறித்து, ஜனவரி 10ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் ஆணை பிறப்பித்தார்.
0 Comments