Tamil Sanjikai

குழந்தை சுஜித் மீட்பு பணிகள் நடந்து வருவதின் காரணமாக இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்எல்ஏக்களின் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி எம்எல்ஏவாக நாரயாணன், விக்கிரவாண்டி எம்எல்ஏவாக முத்தமிழ்செல்வன் இன்று பதவியேற்பதாக இருந்தது. இந்த நிலையில், சுஜித்தை மீட்கும் பணிகள் நடைபெறுவதால் நடக்கவிருந்த புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தற்காலியமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் வரும் 1ஆம் தேதி பதவியேற்றுக்கொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment