இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான பிரபுல் படேல், சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிபா -வின் (FIFA ) கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியர் ஒருவர் பிபா கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆசியன் கால்பந்து கான்ஃபெடரேஷன் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், பிபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், இந்திய கால்பந்து சம்மேளனத்தின் செயலர் குஷல் தாஸ், மூத்த துணை தலைவர் சுப்ரதா தத்தா, பிரபுல் படேல் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். 46 வாக்குகளில் 38 வாக்குகளை பெற்ற பிரபுல் படேல், பிபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்புக்கு தேர்வானார்.
0 Comments