Tamil Sanjikai

பெட்ரோல், டீசல் விலை இறங்குகிறது.

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து மின்னல் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்து வந்ததது.

இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களாகவே இறங்கி வருக்கிறது. கடந்த 18-ம் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டவந்தது. நேற்று பெட்ரோல் விலை 19 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் .82.26 -க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூபாய் .77.85-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை ரூபாய் .3.84-ம், டீசல் விலை ரூபாய் .2.19-ம் குறைந்துள்ளது.

0 Comments

Write A Comment