Tamil Sanjikai

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். 7 முறை மத்திய மந்திரியாக அவர் இருந்துள்ள இவர் . இந்திராகாந்திக்கு பிறகு 2-வது வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் என்ற பெருமையும் உண்டு.

உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என சுஷ்மா சுவராஜ் மறுப்பு தெரிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

0 Comments

Write A Comment