காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அசாம் மாநிலத்தில் இருந்து மேல்-சபை (மாநிலங்களவை) எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரது பதவி காலம் கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இன்று முறைப்படி எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்மோகன் சிங்கின் அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
0 Comments