Tamil Sanjikai

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முடித்துக்கொள்ளப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலும் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு, டெஸ்டில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். 154 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்ஸர் உதவியுடன் தனது 4ஆவது சதத்தை ரோகித் பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் துவக்க ஆட்டக்காரராக சர்மா அடித்த முதல் சாதம் இதுவாகும்.

தொடர்ந்து, 59.1 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா 115 ரங்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

0 Comments

Write A Comment