Tamil Sanjikai

இன்று ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஆளுநர் சத்யபால் மாலிக் ஜம்முவில் தலைமை செயலகத்தில் நடந்த ராணுவ மரியாதை அணிவகுப்பில் கலந்துக் கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது அரசின் சாதனைகளை பற்றி குறிப்பிட்டார். அவர், கடந்த மூன்று மாதங்களில், தீவிரவாதத்தில் ஒரே ஒரு இளைஞர் இணைந்துள்ளார். இந்த கால கட்டத்தில் வேறு எவரும் தீவிரவாத குழுவில் இணையவில்லை என கூறினார். இது பற்றி மக்களவையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், தெற்கு காஷ்மீரின் 4 மாவட்டங்களான அனந்த்நாக், புல்வாமா, சோபியான், குல்காம் ஆகியவற்றில் இருந்து 2018-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி வரை 87 பேர் தீவிரவாதத்தில் இணைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டில் அதிகளவாக 127 இளைஞர்கள் தீவிரவாதத்தில் இணைந்துள்ளனர். இது கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து மிக அதிக எண்ணிக்கை. கடந்த 2016-ம் ஆண்டு 88 காஷ்மீரி இளைஞர்கள் தீவிரவாதத்தில் இணைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 Comments

  1. அண்ணே ஒரு ஆழ்ந்த சிந்தனைக்கு பின்பே அறிந்துகொண்டேன் அருமை அண்ணே😇😍

  2. மாப்ள அருமையான கவிதை... கல்லூரி கால கரம் பிடிக்காத காதல் உணர்வின் மனமும் அவள் நினைவை நினைவூட்டும் மகளின் பிரதிபலிப்பும்.. இவை அனைத்தையும் அறிந்த மனைவியின் மூன்று ஆண்டுகால கணவனை பற்றிய புரிதலும் மிக அருமை.. மாப்ள

Write A Comment