உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரும், அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பிசோஸின் ஃபோனை சவுதி அரசு ஹேக் செய்துள்ளது, உலகம் முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ஜெஃப் பிசோஸின் ஃபோன் சவுதி அரசால் ஹேக் செய்யப்பட்டுள்ளதை அவரது பாதுகாப்பு அதிகாரியான கெவின் டி பெக்கர் உறுதி செய்துள்ளார். அண்மையில் ஜெஃப் பிசோஸ் மற்றும் பிரபல அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளர் லாரன் சான்செஸ் இடையிலான தகவல் பரிமாற்றத்தை வெளியிட்ட அமெரிக்க செய்தித்தாள் ஒன்று, இருவரும் டேட்டிங் செய்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் , பிரபல சவுதி பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி இறப்பு வழக்கு தொடர்பாக ஜெஃப் பிசோஸ் ஃபோனை சவுதி அரசு ஹேக் செய்துள்ளது என்று அவரது பாதுகாப்பு அதிகாரி கெவின் டி பெக்கர் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments