Tamil Sanjikai

வேளாண்மை, வனப்பகுதி, கடலோர பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இதனுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி43 ராக்கெட் மூலம் நேற்று காலை 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி43 ராக்கெட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த 23 செயற்கைக் கோள்களும், ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் 7 செயற்கைக் கோள்களும் அனுப்பி வைக்கப்பட உள்ளன. வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் பூமியில் இருந்து 504 கிலோ மீட்டர் உயரத்திலும், ஹைசிஸ் செயற்கைக் கோள், பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும் நிலைநிறுத்தப்படும் என்றும் இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில் ,டிசம்பர் 5-ஆம் தேதி 5.3 டன் எடையுள்ள செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், மீனவர்களுக்காக புதிய செயலி உருவாக்கியிருப்பதாக குறிப்பிட்டார். டிசம்பர் 5-ஆம் தேதி அதிகாலை 2.08 மணிக்கு, 5 புள்ளி 3 டன்கள் எடை கொண்ட மிகப்பெரிய செயற்கைகோள் ஏவப்படும் என்று தெரிவித்தார்.

0 Comments

Write A Comment