Tamil Sanjikai

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தை தொடர்ந்து பேரவைத் தலைவர் தனபால் தலைமையில், சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் தொடங்கியது . கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் தனபால் நிருபர்களை சந்தித்து அவர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1-ந்தேதி எடுத்துக் கொள்ளப்படும். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும்.

தமிழக சட்டப்பேரவை 23 நாட்கள் நடைபெறும். அனைத்து நாட்களிலும் கேள்வி பதில் இடம் பெறும். மறைந்த உறுப்பினர்களுக்கு 28-ந்தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 29, 30-ந்தேதி அரசு விடுமுறை.

* ஜூலை 1-ந்தேதி வனம், சுற்றுச்சூழல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

* ஜூலை 2ம் தேதி பள்ளிக்கல்வி, விளையாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

* ஜூலை 3ம் தேதி கூட்டுறவு, உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும்.

* ஜூலை 4ந் தேதி எரிசக்தி துறை, ஆயத்தீர்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என கூறினார்.

0 Comments

Write A Comment