சுற்றுலா வரும் வெளி நாட்டு சுற்றூலாப் பயணிகள் பொது இடத்தில் வைத்து முத்தம் கொடுக்கக் கூடாது உள்ளிட்ட 19 வகையான சட்டதிட்டங்களை வகுத்துள்ளது சவுதி அரேபியா.
கச்சா எண்ணெக்கு பெயர் போன நாடு சவுதி அரேபியா. இந்த வருமானத்தை பிரதானமாக கொண்டுள்ள சவுதி அரேபிய அரசு வரும் காலங்களில் கச்சா எண்ணெயின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய் பெருமளவு குறைந்து விடும் என்பதால், தங்களது சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தி அதன்மூலம் வருவாய் ஈட்டத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதன் முறையாக சுற்றுலா விசா வழங்க திட்டமிட்டுள்ளதுடன். 49 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் சுற்றுலா விசாவிற்கான விண்ணப்பங்களை வழங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், இங்குள்ள சட்ட நடைமுறைகளை அறிந்து நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் ஆண்கள் இறுக்கமான உடையணியக் கூடாது. தோள்பட்டை மற்றும் முழங்காலை மறைக்கும் வகையிலான உடை அணிந்திருக்க வேண்டும்.
பொது இடத்தில் முத்தம் கொடுக்க கூடாது. மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணியக்கூடாது. இவ்வாறான 19 கட்டுப்பாடுகளை சுற்றுலா பயணிகளுக்கு விதித்துள்ளது. அன்னட்டின் சட்ட திட்டங்கள் மிக கடுமையாக இருப்பதால், இது போன்ற சட்டதிட்டங்கள் வகுக்கபட்டுள்ளாதாக கூறப்பட்டுள்ளது.
0 Comments