Tamil Sanjikai

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில்,ஐ.பி.எல் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23-வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் 0 ரன், சுனில் நரின் 6 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன், ராபி உத்தப்பா 11 ரன், சுப்மான் கில் 9 ரன், நிதிஷ் ராணா 0 ரன், பியூஸ் சாவ்லா 8 ரன், குல்தீப் யாதவ் 0 ரன், பிரசித் கிருஷ்ணா 0 ரன், என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 108 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்செல் 50 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய தீபக் சாஹர் 3 விக்கெட், ஹர்பஜன்சிங் 2 விக்கெட் இம்ரான் தாஹிர் 2 விக்கெட், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து சென்னை அணி 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரரான வாட்சன் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்,அடுத்து களமிறங்கிய ரெய்னா 14 ரன்களும் , ராயுடு 21 ரன்களும் எடுத்தனர். கெதர் ஜாதவ் 8 ரங்களுடனும் , டூப்லெஸிஸ் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் 17.2 வர்களில் 111 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வென்றனர். 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய சாஹர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

0 Comments

Write A Comment