Tamil Sanjikai

திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அல்லித்துறை கிராமத்தில் வெள்ளந்தாங்கி வன்னியம்மன் கோவில் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மேலும் இந்த போட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு வாடி வாசலில் இருந்து துள்ளி குதித்து வந்த காளைகளை கட்டி தழுவி அடக்கினர். இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் இருந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளை ஏராளமான மக்கள் கண்டுகளித்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

0 Comments

Write A Comment