Tamil Sanjikai

சென்னை அருகே 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த 77 வயது மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

சென்னை புறநகர் பகுதியான குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சரோஜா. 77 வயதான இவர் அவரது வீட்டின் எதிரே தண்ணீர் நிரம்பிய நிலையில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளார். இதுதொடர்பாக அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்டனர், பின்னர் அருகிலுள்ள மருத்துவமனையில் மூதாட்டியை அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment