Tamil Sanjikai

தெலுங்கு நகைச்சுவை நடிகரான அலி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தெலுங்கில் பிரபல நகைச்சுவை நடிகராக இருப்பவர் அலி. தமிழில் நியூ, சேட்டை உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில் தற்போது அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். அவரை, கட்சித் தலைவர் ஜெகன் மோகன், வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அலி, ஜெகன் மோகனை ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக்குவதே தனது குறிக்கோள் எனத் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment