தாதா 87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ தற்போது, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி என்கிற கேமை மையமாக கொண்ட 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற நகைச்சுவை கலந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாக நடிக்கிறார். இவருடன் மேலும் 5 நாயகிகள் நடித்து வருகின்றனர்.
அதோடு, பப்ஜி கேமில் வரும் முக்கிய கதாபாத்திரமாக மொட்டை ராஜேந்திரன் நடித்துவருகிறார். இந்த படம் இளைய சமூகத்தினரின் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் செப்டம்பர் 19ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments