இஸ்ரேல் நாட்டு ஒயின் தயாரிப்பு நிறுவனம் ஒன்று,தனது மதுபான பாட்டில்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தி வருவதாக, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் ஒயின் தயாரிப்பு நிறுவனமான மகா பிரேவரி மதுபாட்டில்களில் மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்து விற்பனை செய்வது அண்மையில் வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து அனைத்து தரப்பினரும்அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங், மாநிலங்களவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்து பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ ஆகியோர் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தப்பட்டது.
0 Comments