Tamil Sanjikai

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் இம்மாத இறுதியில் வியட்நாமில் சந்தித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

பரம எதிரிகளாக இருந்த அமெரிக்கா - வடகொரியா இடையே கடந்த ஆண்டு நட்பு மலர்ந்தது- இதனை அடுத்து டிரம்ப் - கிம் ஜாங் உன் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து வட கொரியா - அமெரிக்கா இடையிலான நட்பு மேலும் வலுவானது. கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் கூறி வந்தார்.

இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், வியட்நாமில் வருகிற 27 மற்றும் 28ம் தேதிகளில் டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும் அவரது பயணத்தின் பொது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஐ யும் சந்திக்க உள்ளார்.

0 Comments

Write A Comment