புத்தாண்டு நெருங்குவதையொட்டி, சென்னை நகர் முழுவதும் விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு. இரவு முழுவதும் ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அடையார், மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வாகனங்களின் ஆவணங்களைப் பரிசோதித்த பின்னரே, வாகன ஓட்டிகளை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
சென்னையில் வாகன திருட்டுகளை தடுக்கவும், ரேசிங்கை கட்டுப்படுத்தவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
0 Comments