Tamil Sanjikai

டெல்லியில் ஆன்லைன் மூலம் நூதன பண மோசடி நடப்பதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, இதுபற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், டெல்லி மோகன் கார்டன் பகுதியில் கால்சென்டர் வைத்து, சமூக வலைதளங்கள் மூலம் ஏராளமானோரிடம் நட்பாக பேசி சிலர் பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த ஆப்பிரிக்க நாட்டவர்கள் 10 பேரை கைது செய்தனர்.

0 Comments

Write A Comment