Tamil Sanjikai

புதுக்கோட்டை மாவட்டம், பூசைத்துறை அருகே, ஓடும் ரயில் முன் செல்பி எடுத்த கல்லூரி மாணவர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் மோதியதில் தனியார் கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் மகேந்திரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செல்ஃபி மோகத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய சமூகத்தின் சிக்கலான பிரச்னையாக இது உருவெடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

0 Comments

Write A Comment