விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் HIV தொற்று ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு மருத்துவர்களின் கவனக்குறைவால் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் பணியாற்றிய டாக்டர் உள்பட ரத்த வங்கி ஊழியர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவாமல் தடுக்க மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிறந்த குழந்தைக்கு எச்ஐவி தொற்று உள்ளதா என்பதை 45 நாட்களுக்கு பிறகு தான் பரிசோதனை செய்ய முடியும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
0 Comments