இந்தியாவின் 2000, 500 மற்றும் ரூ.200 நோட்டுக்களை மக்கள் பயன்படுத்த நேபாள அரசு திடீரென தடை விதித்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுக்கள் வெகுநாட்களாக நேபாளத்தில் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அரசின் ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும், கையில் வைத்திருக்கவும் வேண்டாம் என்று நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகளை மட்டும் புழக்கத்துக்கு பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாள அரசு திடீரென தடை செய்துள்ளது என்பதற்கான காரணங்கள் தெரிவிக்கபட வில்லை. நேபாள அரசின் இந்த முடிவால் இந்தியாவில் பணியாற்றும் நேபாள நாட்டினரும், நேபாளத்துக்குச் சுற்றுலா செல்லும் இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தபோது, நேபாளத்தில் கோடிக்கணக்கில் 500,1000 ரூபாய் நோட்டுகள் தேங்கி விட்டன. அந்த நோட்டுகளை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் நேபாள அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்திய 2000, 500, 200 நோட்டுகளை மட்டும் தற்போது நேபாள அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments