Tamil Sanjikai

ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மீதும், ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட்டு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதும், ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. அதன்அடிப்படையில் போலீசார் தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களை போலீசாரே ஓட்டிச் செல்வதாக பல புகார் எழுந்துள்ளது. தமிழகத்தின் புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி ஏற்றுள்ள ஜே.கே.திரிபாதி நேற்று பிறப்பித்த உத்தரவில் ‘சென்னை ஐகோர்ட்டின் உத்தரவின்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள், பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து போலீசாரும் பணியில் இருப்பவர்களும் பணியில் இல்லாதவர்களும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அவர் அனுப்பி வைத்தார்.

0 Comments

Write A Comment