பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு சொந்தமான (DRDO) ருஸ்தம் - 2 என்ற ஆளில்லா விமானம் சோதனை ஓட்டத்துக்கு உட்படுத்தப்பட்டது. சோதனை ஓட்டத்தின் போது இன்று அதிகாலை 6 மணியளவில் விமானம் அதன் கட்டுப்பாட்டை இழந்து கர்நாடகா மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்து நொறுங்கியது.
விழுந்து நொறுங்கிய சத்தம் கேட்டதும் அதிர்ந்து போன கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிராம மக்கள் விமான விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் , சம்பவ இடத்திற்கு விரைந்த சித்ரதுர்கா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கே.அருண், விமான விபத்து நடந்த இடத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
விழுந்து நொறுங்கிய ஆளில்லா விமான பாகங்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த விபத்து குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
0 Comments