Tamil Sanjikai

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் முன்பு மாணவி மீது சக மாணவர் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி சுசித்ரா, அவர் மீது சகமாணவரான முத்தமிழன் ஆசிட் வீசியுள்ளார். இதில் , அந்த மாணவி படுகாயம் அடைந்தார். ஆசிட் வீசிய மாணவர் முத்தமிழனை பிடித்து சக மாணவர்கள் அடித்து உதைத்ததில் அவரும் படுகாயமடைந்தார். படுகாயம் அடைந்த இருவருக்கும் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

0 Comments

Write A Comment