Tamil Sanjikai

கடந்த மாதம் இந்திய சந்தையில் ஜாவா பிரான்ட் பைக்குகள் ரீ-என்ட்ரி கொடுத்தது. மூன்று புதிய பைக்குகளை முதற்கட்டமாக அறிமுகம் செய்திருக்கும் ஜாவா அவற்றிக்கான முன்பதிவுகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது. புதிய ஜாவா பைக்குகளின் விநியோகம் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில், ஜாவா பைக்குகளின் இரண்டு விற்பனை மையங்களை பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்குள் நாடு முழுக்க 105 விற்பனை மையங்களை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் புதிய பைக்குகளை அறிமுகம் செய்யும் போதே ஜாவா நிறுவனம் இந்தியாவில் 105 விற்பனை மையங்கள் மற்றும் 3 எஸ் மையங்களை விற்பனை, சர்வீஸ் மற்றும் ஸ்பேர் உள்ளிட்டவைகளுக்கு என திறக்க இருப்பதாக தெரிவித்தது. விற்பனை மையங்கள் இயங்க தொடங்கி இருக்கும் நிலையில், பூனேவில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் புதிய ஜாவா பைக்குகளை நேரடியாக முன்பதிவு செய்யலாம். புதிய ஜாவா பைக்குகளின் விநியோகம் ஜனவரி மாதத்தில் தொடங்க இருக்கிறது.ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் ஜாவா விற்பனையாளர்களிடம் முன்பதிவு செய்வோர் தங்களது வாகனத்தை பெற சிலகாலம் காத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் ஜாவா பைக்குகள் ஜாவா 1.64 லட்சம், ஜாவா ஃபார்டி டூ 1.55 லட்சம் மற்றும் பெராக் 1.89 லட்சம் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், பெராக் மாடல் மட்டும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனை செய்யப்பட இருப்பதாக தெரிகிறது.

0 Comments

Write A Comment