கோவையில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை, சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி D1 காலல் நிலைய போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாலாஜா சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் போலீஸ் வாகனத்தை பார்த்ததும் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இவரை விரட்டி பிடித்த D1 காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த சுல்தான் அலாவுதீன்(21) என்பது தெரியவந்தது.
அவனிடம் தொடர்ந்து போலீசார், வாகனத்தை கண்டு ஓடியதற்கான காரணம் குறித்து விசாரித்த போது , கோவையில், கடந்த மே மாதம் 21ஆம் தேதி விஜயகுமார் என்பவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி சென்னையில் இருந்ததாகவும், இரவு நேரங்களில் மட்டும் வெளியே வருவேன் என்றும், அப்படி வரும்போது என்னை பிடிப்பதற்காக நீங்கள் வருவதாக நினைத்து தான் ஓட்டம் பிடித்தேன் என்றும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அவரை கோவை B3 காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்க சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
0 Comments