தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல், தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 100 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் 71 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் டாக்டர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 14 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 Comments