Tamil Sanjikai

ஜம்மு மற்றும் லடாக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து , ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 5ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்படுவதாகவும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேங்கள் உருவாக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினம் காஷ்மீரில் 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டது. இந்நிலையில் இன்று ஜம்மு மற்றும் லடாக் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாளை முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment