நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் வீட்டு பணிப்பெண் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நெல்லையில், ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்..வீட்டில் இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய 3 பேர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இது திமுகவினர் மத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது
முன்னாள் மேயர் 'நெல்லை' உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நெல்லையில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயரின் பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்
0 Comments