Tamil Sanjikai

பெயர்பெற்ற பொருளியல் வல்லுநரான சுர்ஜித் பல்லா பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து விலகியுள்ளார். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு நிதி ஆயோக்கின் உறுப்பினரான விவேக் தேவ்ராயைத் தலைவராகக் கொண்டது. இந்தக் குழுவில் பொருளியல் வல்லுநர்களான சுர்ஜித் பல்லா, ரத்தின் ராய், ஆசிமா கோயல், சமிகா ரவி ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்கள் பொறுப்பு வகித்து வந்தனர்.

இந்நிலையில் புகழ்பெற்ற பொருளியல் வல்லுநரும் கட்டுரையாளருமான சுர்ஜித் பல்லா, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் தான் வகித்து வந்த பொறுப்பில் இருந்து டிசம்பர் முதல் நாளில் விலகியதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

Write A Comment