ரஷ்யாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் சிறுவனின் ஆசையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவன் ஒருவன் கடுமையான நோய் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். அந்த சிறுவனுக்கு ரஷிய அதிபர் புடினுடன் கைக்குலுக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை இருந்து வந்துள்ளது.
இதை அறிந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அந்த 10 வயது சிறுவனை தலைநகர் கிரம்ளினில் உள்ள அதிபர் மாளிக்கைக்கு வரவழைத்து உபசரித்ததோடு, அவனது ஆசையையும் நிறைவேற்றினார்.
கடும் நோய் தாக்குதலால் அவதிப்படும் ரஷ்ய குழந்தைகளுக்காக செயல்படும் “Dream with me” அமைப்பில் உறுப்பினராக இருக்கும் அந்த சிறுவனின் ஆசை, மாஸ்கோவை சேர்ந்த ஒரு இளைஞர் மூலம் ரஷ்ய அதிபருக்கு தெரியவந்தது என குறிப்பிடத்தக்கது.
0 Comments