Tamil Sanjikai

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவில் நடைபெற்ற 52 கிலோ எடை ஆண்கள் பிரிவின் அரையிறுதிபோட்டியில், சாகேன் பிபோஸினோவை எதிர்கொண்ட பாங்கல் 3-2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் அமித் பாங்கல் ஆவார்.

நாளை இறுதிப்போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாக்கோபிடின் சோய்ரோவை அமித் பாங்கல் எதிர்கொள்கிறார்.

0 Comments

Write A Comment