Tamil Sanjikai

வடமேற்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பியானவர் உதித்ராஜ். தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

6 ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 12 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் நிலையில், கிழக்கு டெல்லி தொகுதியில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், புதுடெல்லியில் மீனாட்சி லேகி ஆகியோரை வேட்பாளர்களாக பாஜக அறிவித்தது. உதித்ராஜ் ஓரங்கட்டப்பட்டார்.

இந்த அதிருப்தியின் தொடர்ச்சியாக, வடமேற்கு தொகுதியின் வேட்பாளர் என்ற அறிவிப்புக்காகக் காத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த உதித் ராஜ், வாய்ப்பளிக்கப்படவில்லை எனில் பாஜகவிலிருந்து விலகப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், மக்களவை தொகுதியில் போட்டியிட சீட் தராததால் பாஜக எம்.பி உதித்ராஜ் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

0 Comments

Write A Comment