Tamil Sanjikai

கஜா புயலால் தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்துள்ளன. புயல் மழையால் நாற்பதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் கஜா புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரளா துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார். நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு குடிநீர், தார்ப்பாய்கள், மெழுகுவர்த்திகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், புத்தாடைகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் இதனை கேரள மாநில இயற்கைப் பேரிடர் மீட்பு மையம் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Comments

Write A Comment