Tamil Sanjikai

உடல் உறுப்பு தானத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த தமிழகம், 2018 ஆம் ஆண்டில் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உடல் உறுப்பு மாற்று அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளின் எண்ணிக்கை 131 ஆக இருந்த நிலையில், படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்து, 2017 ஆம் ஆண்டில் 160 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில், நடந்து முடிந்த 2018 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை, 140 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் சுமார் 12 சதவீதம் அளவிற்கு உறுப்பு தானம் வீழ்ச்சி கண்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி தெலங்கானா மாநிலம் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தமிழகத்தில் உறுப்பு தானத்தை நிர்வகிக்கும் transtan அமைப்பில் நிலவும் சில பிரச்னைகள் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும் அந்த அமைப்பின் உறுப்பினர், செயலாளர் உள்ளிட்ட பல பணியாளர்கள் பணியில் இருந்து விலகிவிட்டதும் மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. தேசிய அளவில் இருந்து வரும் குறுக்கீடுகளும் உறுப்பு தானத்தில் தமிழகம் சரிவை சந்தித்திருப்பதற்கு காரணியாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments

Write A Comment