Tamil Sanjikai

நெல்லை வள்ளியூரில், தனது உறவினரின் !வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த நிலையில், வீட்டை காலி செய்ய மறுத்த பெண்ணுக்கு ஒருமாதம் சிறைத்தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொன்னுத்தாயி என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பொன்ரூபி மெர்சிக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், மனுதாரருக்கு சொந்தமான வீடு ஒப்படைக்கப்பட்டதை 2 மாதத்தில் கீழமை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

0 Comments

Write A Comment