தெலங்கானாவில் லஞ்சம் கேட்டதாக பெண் வட்டாட்சியர் ஒருவரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் பெண் வட்டாட்சியர் விஜயா ரெட்டியை விவசாயி சுரேஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுள்ளார். உடனே, அங்கிருந்தவர்கள் சுரேஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், நில பத்திரப்பதிவுக்கு வட்டாட்சியர் லஞ்சம் கேட்டு, தன்னை இரண்டு மாதம் அலைக்கழித்ததாகவும், அதனால், ஆத்திரம் அடைந்ததால் பெண் வட்டாட்சியரை கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
பெண் வட்டாட்சியரை விவசாயி ஒருவர் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments