சென்னை விமானநிலையத்தில் ரூ. 71.5 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ. 63.6 லட்சம் மதிப்பிலான இரானியன் குங்குமப்பூவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, தங்களது உடைமைகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட ரூ.71.5 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ தங்கம் மற்றும் ரூ.63.6 லட்சம் மதிப்புள்ள 26.5 கிலோ இரானியன் குங்குமப்பூ ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments