Tamil Sanjikai

பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், கதாசிரியருமான பீட்டர் மாஸ்டர்சன் தனது 84வது வயதில் காலமானார். கடந்த 14 வருடங்களாக பார்கின்சன்ஸ் என்னும் நரம்பு சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வந்த பீட்டர் மாஸ்டர்சன் நியுயார்க்கில் உள்ள கிண்டர் ஹுக் பகுதியில் உள்ள தனது வீட்டில் கடந்த செவ்வாய் மாலை 6 மணியளவில் திடீரென நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். மருத்துவ முதலுதவி கொடுத்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என அவரது மகள் மேரி ஸ்டுவார்ட் மாஸ்டர்சன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தனது சிறந்த படைப்புகள் அனைத்தும் தன்னுடைய தந்தையிடம் இருந்து வந்தவையே எனக் கூறினார்.

அவர் ஒரு வரலாற்றாசிரியர், சிந்தனையாளர். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த மாலுமி, தனது 70வது வயதிலும் கூட தனது பாய்மர படகில் உலகை சுற்றும் போட்டியில் பங்கெடுத்திருந்தார். 1934ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி பிறந்த கார்லோஸ் பீ மாஸ்டர்சன் பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். பின்னர் 1989ம் ஆண்டு நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்றார். 1975ம் ஆண்டு வெளியான ’தி ஸ்டெப் பொர்டு வைப்ஸ்’ என்னும் திரைப்படத்தில் மாஸ்டர்சனும் அவரது மகளும் தந்தை- மகள் கதாப்பாத்திரங்களில் ஏற்று சிறப்பாக நடித்திருந்தனர்.

மாஸ்டர்சன் எழுத்தாளர் லாரி எல் கிங் என்பவருடன் சேர்ந்து பிராட்வே மியூசிக்கல் புரொடக்சனுக்காக ’தி பெஸ்ட் லிட்டில் ஓர் ஹவுஸ் இன் டெக்சாஸ்’ என்னும் நூலை எழுதினார். மாஸ்டர்சனின் மனைவி கார்லின் கிளின் பிராட்வே புரொடக்‌ஷனில் நடித்து சிறந்த நடிகைக்கான டோனி விருதை பெற்றவர். அவர் ஒரு சிறந்த இயக்குனருக்கான நடிகர், எலியா ஹசன் மற்றும் பிராங் காப்ரா ஆகியோரால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தார் , அவர் எனக்கு ஒரு முன்மாதிரி. அவரது இழப்பு எனக்கு பேரிழப்பு என்று மாஸ்டர்சனின் மகள் மேரி ஸ்டுவார்ட் கூறினார். மாஸ்டர்சனுக்கு அலெக்ஸாண்ட்ரா, மேரி ஸ்டுவர்ட் மற்றும் பீட்டர் கார்லோஸ் பீ மாஸ்டர்சன் என்ற மூன்று பிள்ளைகளும், ஆறு பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

0 Comments

Write A Comment