Tamil Sanjikai

புல்வாமா பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைநகரில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து அவசரமாக துணை ராணுவப் படையினரை அங்கு அனுப்பி வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதை அடுத்து 100க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவப் படையினர், விமானம் மூலம் ஸ்ரீநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒரு கம்பெனி என்பது 80 முதல் 150 வீரர்களைக் கொண்ட குழுவாகும். பாதுகாப்புப் படையினருடன் இணைந்து, அம்மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment