வேதாளம், விஸ்வாசம் படங்களில் தாதா வேடம் ஏற்று வில்லன்களுடன் மோதினார் தல அஜித். தற்போது திரைக்கு வந்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் மூலம் இன்னொரு நடிப்பு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலும் குவிக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அதிரடி கதையில் நடிக்க அஜித் தயாராகி உள்ளார். இந்த படத்தையும் வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது. படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் குறித்து போனிகபூர் கூறியதாவது:-
“அஜித் நடிக்க உள்ள புதிய படம் முழுமையான அதிரடி சண்டை படமாக இருக்கும். அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். பைக் மற்றும் கார் பந்தய சாகச காட்சிகள் படத்தில் இடம்பெறும். குறிப்பாக பைக் பந்தயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த படத்தை தமிழில் மட்டுமே தயாரிக்கிறேன். இந்தியில் வெளியிடுவது குறித்தும் யோசிப்பேன்.” என கூறினார்.
0 Comments