அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில்அஞ்சலி நடித்துள்ள படம் 'லிசா. இதனை ‘பி.ஜி. மீடியா ஒர்க்ஸ்' நிறுவனம் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரித்துள்ளார்.
3டி தொழில்நுட்பத்தில் ஹாரர் ஜானரில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இதன் தயாரிப்பாளரான பி.ஜி.முத்தையாவே ஒளிப்பதிவும் செய்துள்ளார்.
ஏற்கனவே, வெளியிடப்பட்ட 'லிசா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர், டீசர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் லிசா படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. ரத்த கரையுடன் துவங்கும் இதன் காட்சிகள் மனதை பதற வைக்கும் காட்சிகளாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தை 3Dயில் பார்த்தால் எப்படி இருக்குமோ? என்கிற பயத்தை ஏற்படுத்தும் வண்ணம் லிசா ட்ரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது.
0 Comments