Tamil Sanjikai

அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் 2 வாரத்தில், கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிக பிரகாசமான ஹெட் லைட்களால், வாகனங்களை இயக்குவோர் கண் கூசும் தன்மைக்கு உட்பட்டு அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். மேலும் இதனால், முந்தி செல்ல முயல்வதோ, அல்லது எதிரில் வரும் வாகனத்தின் தூரத்தை ஆராய்வதோ சிக்கலாவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடக்ககூடிய விபத்துகள் பெரும்பாலும் ஹெட்லைட்டுகளால் ஏற்படுவதாகவும், முகப்பு விளக்குகளின் மையப்பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டால், எதிர் திசை ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2 வாரத்தில் அனைத்து மோட்டார் வாகன ஹெட்லைட்டுகளின் மையப்பகுதியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டவும், அதனை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தவறும் வாகன உரிமையாளர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யலாமே? எனவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

0 Comments

Write A Comment