சென்னையின் புறநகர் பகுதியான பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் மோதி ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே ஐ.டி. பெண் ஊழியர் சுமித்ரா தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, எதிரே வந்த ரயில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments