Tamil Sanjikai

விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கில், சட்ட ஒழுங்கு காவல்துறை தலைவர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கட்சி கொடி மற்றும் பதவிகள் குறித்த பலகை வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி பரிசோதனை செய்ய சில காவல் துறையினர் தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வாகனங்கள் சோதனை செய்யப் படாத போது, சட்டவிரோத மற்றும் சமூக விரோத செயல்களுக்கும் வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பதில்லை என்றும், சுங்கச்சாவடி கட்டணங்களை செலுத்தாமல் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சண்டையிடும் சூழலும் உள்ளது" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment